மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
7 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில், கழிவறை மற்றும் குளியல் அறைகளை கட்டி புனரமைத்த, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த இரண்டாண்டுகளாக , கழிவறை மற்றும் குளியல் அறைகள் இல்லாமல், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனிடம் கோரிக்கை வைத்தனர். அவர் தனது சொந்த செலவில் மூன்று இடங்களில், கழிவறை மற்றும் குளியல் அறைகளை கட்டி, புனரமைத்து திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் சவுரிராஜன் , அவைத்தலைவர் எழிலன், முன்னாள் கவுன்சிலர் தனசேகர், இளைஞர் அணி நிர்வாகி மதன் பாபு, மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago