மேலும் செய்திகள்
தினமலர்- - பட்டம் இதழ் அறிவு பெட்டகம்
23 hour(s) ago
காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி
23 hour(s) ago
ஆரோவில்லில் தங்கியிருந்த இலங்கை அகதி, முகாமில் ஒப்படைப்பு
23 hour(s) ago
தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பா.ஜ., கட்சி தலைவர் செல்வகணபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் பா.ஜ., தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் 10 ஆண்டுகளாக பா.ஜ., கட்சிக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை, தொகுதி, மாவட்ட, மாநில அளவில் அனைவரின் ஒருமித்த கருத்துடன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நிர்வாகிகளின் உழைப்பால், 6 எம்.எல்.ஏ.,கள் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு, கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. 3 ஆண்டுகள் பல்வேறு நல திட்டங்கள், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிலுவை சம்பளம், 7வது ஊதிய குழு நிலுவை தொகை, முதியோர் உதவித்தொகை உயர்வு, நீண்ட காலம் நிரப்பப்படாமல் இருந்த பணியிடங்கள், நேர்மையான முறையில் நிரப்பப்பட்டது.இந்நிலையில், எந்த அனுபவமும் இல்லாமல் திடீரென கட்சி தலைமை பொறுப்பேற்ற செல்வகணபதி, தன்னுடைய மோசமான நிர்வாக திறமையால் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த நிர்வாகிகளை நீக்கி, கிளை, கேந்திரம் கலைத்து விட்டு தன்னுடைய சொந்த நிறுவனம் போல் கட்சியை தவறாக வழி நடத்தியதால், ஆளும் கட்சி அமைச்சராக உள்ள வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். இதற்கு முழு காரணம் கட்சி தலைவர் செல்வகணபதி. எனவே, தார்மீக பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியை அவர், ராஜினாமா செய்ய வேண்டும்.லாஸ்பேட்டையில் கடந்த தேர்தலில் 8 ஆயிரம் ஓட்டு பெற்ற என்னை தேர்தல் பணியாற்ற விடாமல் செய்தும், நிர்வாகிகளை தொகுதியில் வேலை செய்யவிடாமல் தடுத்த எம்.பி., பதவியை காங்., கட்சிக்கு செல்வகணபதி தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இது தொடர்பாக தேசிய தலைமை ஆய்வு செய்ய வேண்டும். புதுச்சேரியில் பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாள் முழுதும் தியாகம் செய்து பா.ஜ., கட்சியை படிப்படியாக வளர்த்தார்கள். ஆனால் பா.ஜ., கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றாமல் குறுக்கு வழியில் நியமன எம்.எல்.ஏ., ராஜ்சபா எம்.பி., மாநில பொருளாளர், மாநில தலைவர் என்று எந்த வேலையும் செய்யாமல் கட்சி பலனை செல்வகணபதி அனுபவித்து வருகிறார். ஒட்டுமொத்த கட்சிக்கு துரோகம் விளைவித்த கட்சி தலைவரை, தேசிய தலைமை மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago