உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ.2.39 லட்சம் மோசடி

6 பேரிடம் ரூ.2.39 லட்சம் மோசடி

புதுச்சேரி, : புதுச்சேரியில், 6 பேரிடம், .2.39 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரின் வங்கி கணக்கில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளனர். அதேபோல முதலியார்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் எடுத்துள்ளது.திருபுவனையை சேர்ந்த குமரேசனிடம் 36 ஆயிரம், புதுச்சேரி வனிதா 40 ஆயிரம், உப்பளம் சோபியானாடின் 17 ஆயிரம், சாரம் மணிகண்டன் 36 ஆயிரம் ரூபாய், என ஆன்லைன் மோசடியில், 6 பேரும் மொத்தமாக 2.39 லட்சம் ரூபாய் ஏமாந்துள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை