உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டி நடத்த நிதியுதவி

கிரிக்கெட் போட்டி நடத்த நிதியுதவி

புதுச்சேரி : புதுச்சேரி கிரிக்கெட் போட்டிக்கு, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் லட்சுமி நாராயணன் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில், தல பிரதர்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும், 4ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி கடந்த, 20ம் தேதி துவங்கியது. இந்த போட்டியானது, 10 ஓவர்கள் அடிப்படையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடக்கிறது.இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு - 30 ஆயிரம்; இரண்டாம் பரிசு - 20 ஆயிரம்; மூன்றாம் பரிசு - 10 ஆயிரம்; நான்காம் பரிசு - 5 ஆயிரம்; ஐந்தாம் பரிசு - 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.இந்த போட்டிக்கு, புதுச்சேரி பா.ஜ., கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் லட்சுமி நாராயணனை சந்தித்து அப்பகுதி இளைஞர்கள் அழைப்புவிடுத்தனர்.அவர் தன் சொந்த நிதியில் இருந்து, இந்த போட்டிக்கான, முதல் பரிசு 30 ஆயிரம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகளுக்காக 20 ஆயிரம் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை