உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

காரைக்கால் : காரைக்காலில் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.காரைக்கால், வளத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண், 32; வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்தார். சிறுமிக்கு திடீரென, உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதனையில், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுக்குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அருண் மீது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ