உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாதன் அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.நாதன் அறக்கட்டளை இணை ஒருங்கிணைப்பாளர் விஜயபூபதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் நோக்க உரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் லட்சுமி தத்தை வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, நாதன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும், தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ரமேஷ், முருகன், சோமசுந்தரம், திருமாள், நடராஜ், ஆறுமுகம் உட்பட நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கந்தசாமிபாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ