உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அரசு சலுகைகள்; எதிர்க்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அரசு சலுகைகள்; எதிர்க்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில், ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினருக்கு அரசின் சலுகைகள் கிடைத்திட எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ரங்கசாமியை, சட்டசபையில் சந்தித்து கொடுத்துள்ள மனு: இந்திய எல்லைப் பகுதிகளில் கடும் குளிர், வெயில் என்றும் பாராமல் எல்லை சாமிகளாக நம்மையெல்லாம் பாதுகாக்கும், துணை ராணுவப் படை வீரர்கள், 20 ஆண்டுகள் தொடர் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறுகின்றனர்.இவர்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்றே, வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த, 2012ம், ஆண்டில், சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எனவே ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினருக்கும், அதே சலுகைகள் வழங்க தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தியும் அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.அரசுக்கான வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்ற போதும் உரிமைகோர முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இதன் காரணமாக குறைந்த சம்பளத்திற்கு கிடைத்த வேலையை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், நாட்டை பாதுகாத்த நம் மண்ணின் மைந்தர்களும் அரசின் சலுகைகளைப் பெற அரசு கொள்கை முடிவெடுத்து நடப்பாண்டில் அரசாணை வெளியிட்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ