உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குருகுலம் மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

குருகுலம் மேல்நிலைப்பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி: குருகுலம் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.கோரிமேடு குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி ஹரிணி பிரியா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். கணிதத்தில் ஆறு மாணவர்கள், அறிவியலில் ஒரு மாணவர் 100க்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வில் மாணவி காவியா, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி முதல்வர் அருள்செல்வி ராஜேந்திரன் பாராட்டினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் சாந்தி (எ) முத்தாலம்மாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் அருள்செல்வி ராஜேந்திரன் கூறுகையில், 'பள்ளியில் ப்ரிகே.ஜி., முதல் பிளஸ் 1 வரை சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களின் தனித்திறமை மேம்படுத்தும் வகையில் சிலம்பம், யோகா, அபாகஸ் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை