உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கனமழை

புதுச்சேரியில் கனமழை

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் காலை வழக்கம் போல் வெயிலடித்தது. இரவு 9:00 மணியளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழை ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதன் காரணமாக புதுச்சேரியின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. புஸ்சி வீதியில் மழைநீர் சாலையில் அருவி போல் ஓடியது. இதேபோல் மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம் பகுதிகளில் கன மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ