உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

அரியாங்குப்பம்: மது குடிப்பதை கண்டித்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் காந்தி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 28; இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவர் தொடர்ந்து மது குடித்து வருவதால், மனைவி கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் இரும்பு கம்பியால், மனைவி ரோசலினை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, ரோசலின் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி