உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று மதுக்கடைகளை திறந்தால் லைசென்ஸ் ரத்து

இன்று மதுக்கடைகளை திறந்தால் லைசென்ஸ் ரத்து

புதுச்சேரி, : இன்று மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து வகையான மதுக்கடைகளும் நான்கு பிராந்தியங்களிலும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என தேர்தல் துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் துறையின் உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்தால், கலால் சட்டத்தின் கீழ் அபராதம் விதிப்பதோடு, லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ