உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நமச்சிவாயம் ஜெயித்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்: சபாநாயகரின் ஆதங்க வீடியோ வைரல்

நமச்சிவாயம் ஜெயித்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்: சபாநாயகரின் ஆதங்க வீடியோ வைரல்

புதுச்சேரி: நமச்சிவாயம் ஜெயித்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என சபாநாயகர் செல்வம் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ சமூக வளைதளங்கில் வைரலாகி வருகின்றது.புதுச்சேரி அடுத்த மணவெளி பரமச்சி நகர் சுடலை வீதியில் ரூ.14 லட்சம் செலவில் போர்வெல் போடும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது.இதில் சபாநாயகர் செல்வம் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.சபாநாயகர் செல்வத்தை கண்டதும்,அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களுடன் சூழ்ந்தனர். இதை கண்ட அவர், அனைவரின் கோரிக்கைளை ் பொறுமையாக கேட்டறிந்தார். அப்போது சபாநாயகர் செல்வம், நமச்சிவாயத்திற்கு நீங்கள் ஓட்டுபோட்டியிருந்தால் அவர் மத்திய அமைச்சர் ஆகி இருப்பார். நானும் அமைச்சராகி இருப்பேன். உங்கள் பிரச்னைகளையும் சரி செய்திருப்பேன் என்று ஆதங்கத்துடன் சொல்ல,அங்கிருந்தவர்கள் திகைப்பில் .அனைவரும் மவுனமாகினர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ