உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி : சோதனை சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்றிரவு ஆய்வு செய்தார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறையினர் மாநில எல்லைப் பகுதியில் சோதனை சாவடி அமைத்து, வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார்கள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு எல்லைப் பகுதியான கோரிமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்றிரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து திருக்கனுார், பத்துக்கண்ணு, அய்யன்குட்டிப்பளையம் ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் வாகன சோதனை பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ