| ADDED : ஆக 06, 2024 07:15 AM
புதுச்சேரி : குரூப்- பி அரசிதழ் பதிவு பெறாத பதவிகளில் எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.புதுச்சேரி சட்டசபை நேற்று துவங்கியதும் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட புதிய அறிவிப்பு:குரூப்- பி அரசிதழ் பதிவு பெறாத பதவிகளில் எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்(பி.டி.,) உள் ஒதுக்கீடு வழங்கி கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு முன்னர் சில குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத பதவிகளான சப் இன்ஸ்பெக்டர், வேளாண் அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், திட்ட உதவியாளர், துறைமுக இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு கடந்த 2022 ம் ஆண்டு ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஓ.பி.சி., பிரிவினருக்கு மொத்தமாக 33 சதவீதம் அளிக்கப்பட்டது. பணி நியமனத்தில் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக முன்னர் அறிவித்தப்படி இப்பணி இடங்களை நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பினர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த அறிவிப்பினை ரத்து செய்துவிட்டு, எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.