உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச அறிவியல் செயல் திட்ட போட்டி பூரணாங்குப்பம் அரசுப் பள்ளி முதலிடம்

சர்வதேச அறிவியல் செயல் திட்ட போட்டி பூரணாங்குப்பம் அரசுப் பள்ளி முதலிடம்

புதுச்சேரி: அறிவியல் உருவாக்குவோம் எனும்சர்வதேச செயல் திட்ட போட்டியில், பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி முதல் பரிசு பெற்றது.புதுச்சேரி அறிவியல் இயக்கம், கல்வித்துறையின் மாநில பயிற்சி மையம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2023-24ம் ஆண்டிற்கான, 17வது செயல் திட்ட ஆராய்ச்சி போட்டியை நடத்தியது. இதில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் செய்த, 12 செயல் திட்டங்கள் காணொலி காட்சிகளாக பதிவு செய்தும், செயல் திட்ட அறிக்கைகளாகவும், அஞ்சல் வழியாக பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த, 12 தேர்ந்தெடுக்கப்பட்ட செயல் திட்டங்களை, பாரீஸ் பல்கலை தலைவர், பேராசிரியர்கள் மதிப்பீடு செய்து, நேற்று மதியம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பரிசுகளை அறிவித்தனர்.இதில், முதல் பரிசு, ரூ.18 ஆயிரத்தை, பூரணாங்குப்பம், அரசு நடுநிலைப்பள்ளி பெற்றது. இரண்டாம் பரிசாக ரூ.6 ஆயிரத்தை, காரைக்கால், கோவில்பத்து அரசு உயர்நிலைப்பள்ளி; இந்திரா நகர், இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி; காரைக்கால் கோவில் பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றன.பரிசளிப்பு விழா,பள்ளிக்கல்வி இயக்குனரக கருத்து கூடத்தில் நடந்தது. புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி, மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு அலுவலர் சுகுணா சுகிர்தா பாய், பாரீஸ் பல்கலை ஒருங்கிணைப்பாளர் சில்வி சலாமுத்து, அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன், அறிவியல் உருவாக்குவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்ராஜா உட்பட பலர் மாணவர்களை பாராட்டினர்.அறிவியல் இயக்க துணைத்தலைவர் ேஹமாவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆலோசகர் சேகர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை