உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோரப்பட்டு அரசு பள்ளியில் சர்வதேச யோகா தின விழா 

சோரப்பட்டு அரசு பள்ளியில் சர்வதேச யோகா தின விழா 

திருக்கனுார் : சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் 10வது சர்வதேச யோகா தின விழா நடந்தது.தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமரன் மாணவர்களுக்கு யோகா பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தார்.இதில், சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் காங்கேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்குயோகா சீருடை வழங்கி, யோகா நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஏற்பாடுகளை ஆசிரியர் மாணிக்கவேலு மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்