உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

வாலிபரை கத்தியால் வெட்டியவருக்கு வலை

புதுச்சேரி : வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.கூடப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய், 26; தனியார் கம்பெனி ஊழியர். இவர் வில்லியனுார், திருமுருகன் நகர் இரண்டாவது தெருவில் வசிக்கிறார். சஞ்சய் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ராகுல், பரத், கல்மேடுபேட்டைச் சேர்ந்த பாலா, மற்றும் கூடப்பாக்கம், அம்பேத்கர் நகர் அன்பரசன் ஆகியோருடன் கூடப்பாக்கம் சிவன் கோவில் தாமரை குளம் அருகில் மது அருந்தினர்.அப்போது அன்பரசனுக்கும், சஞ்சய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அன்பரசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஞ்சயை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். ரத்தவெள்ளத்தில் சரிந்த சஞ்சயை நண்பர்கள் மீட்டு ஜிப்பமரில் அனுமதித்தனர். அவரது புகாரின் பேரில், அன்பரசன் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்