உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயி வீட்டில் நகை கொள்ளை

விவசாயி வீட்டில் நகை கொள்ளை

புவனகிரி, : புவனகிரி அடுத்த கீரப்பாளையம் வெல்கம் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயி. இவர் வீட்டை பூட்டிக் கொண்டு தனது மனைவியுடன் விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. தகவலறிந்த ராமமூர்த்தி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது.தகவலறிந்த ஏ.எஸ்.பி., ரகுபதி, மற்றும் புவனகிரி போலீசார், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்கள் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை