மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், வரும் 10ம் தேதி, 57வது கம்பன் விழா துவங்குகிறது. புதுச்சேரி கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி., நேற்று அளித்த பேட்டி:கம்பன் கழகம், புதுச்சேரிக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. கம்பனின் இலக்கியத்தை வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கம்பன் கலையரங்கில், வரும் 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, 57வது கம்பன் விழா நடக்க உள்ளது.முதல் நாள் துவக்க விழாவில் திருநாள் மங்கல நிகழ்ச்சியில், கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் பல்வேறு நுால்கள் வெளியிடப்பட உள்ளன. மேலும், புதுச்சேரி மாநில சிறந்த தமிழ்ப்புலவர்களுக்கான பரிசுகளும், கம்பன் கழக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் எழிலுரை, தனியுரை, கருத்தரங்கம், உள்ளிட்ட பல்சுவை இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.அடுத்த நாள், இளையோர் அரங்கம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு, வழக்காடுமன்றம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா இறுதி நாளில், சிந்தனை அரங்கம் உள்ளிட்ட ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகள் தொடந்து நடக்க உள்ளன. இந்த விழாவில், தமிழ் சான்றோர்கள், பல்துறை அறிஞர்கள் சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago