| ADDED : ஆக 15, 2024 05:07 AM
புதுச்சேரி: இந்திய அளவில் தேசிய உயர்கல்வி தர வரிசையில், காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 77வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.லாஸ்பேட்டை, காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 2024-25ம் ஆண்டிற்கான, பி.எச்.டி., சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்த புதுச்சேரி பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, www.pondiuni.edu.in, இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.இந்தாண்டு முதுகலை முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்கள், மதிப்பெண் நகல்களை உடனடியாக கல்லுாரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என, நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் இந்திய அளவில், தேசிய உயர்கல்வி தர வரிசையில், 77வது இடத்தை பெற்றுள்ளது. இந்த சாதனைக்காக கவர்னர், முதல்வர், உயர்கல்வி அமைச்சர், அரசு செயலர், உயர்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, நிறுவன இயக்குநர் செல்வராஜ், நன்றி தெரிவித்துள்ளார்.