உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு வலை

மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு வலை

புதுச்சேரி: மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடிவருகின்றனர். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்,42; இவர் புதுச்சேரியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் மனைவியின் மீது சந்தேகமடைந்த ஸ்டீபன் நேற்று வீட்டிற்கு வந்து மனைவியின் மொபைல் போனை உடைத்தார். ஏன் மொபைலை உடைத்தாய் என மனைவி கேட்டதற்கு ஆத்திரமடைந்த, அவர் மனைவியை கத்தியால் குத்தினார். இதில், காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்டீபனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை