உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூனிச்சம்பட்டு ஓட்டுச்சாவடி முற்றுகை

கூனிச்சம்பட்டு ஓட்டுச்சாவடி முற்றுகை

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு காலனி ஓட்டுச்சாவடி மையத்தில் 6:00 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களை ஓட்டளிக்க அனுமதிக்க கோரி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு காலனி 5வது ஒட்டுச்சாவடி மையத்தில் மாலை 3:40 மணியளவில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.அந்த ஓட்டுச்சாவடி மையத்திற்கு மாலை 6:00 மணிக்கு மேல் வந்த 10க்கும் மேற்பட்டோருக்கு ஓட்டுப்போட அனுமதி மறுக்கப்பட்டது.இதையறிந்த பொதுமக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்த நேரத்திற்கு ஈடு செய்யும் வகையில், 6:00 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி ஓட்டுச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், தேர்தல் விதிமுறைபடி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவிற்கு அனுமதி அளிக்கப்படும். 6:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பின், வந்தவர்களை ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க முடியாது என, அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் விதிமுறைகளை கடை பிடிக்கும்படியும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து கலைந்து போக செய்தனர். இதனால், மாலை 6:00 மணிக்கு மேல் வந்த சிலர் ஒட்டளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ