உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதி திராவிடர் சிறப்பு கூறு நிதி பணிகள் குறித்து இயக்குனரிடம் எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை

ஆதி திராவிடர் சிறப்பு கூறு நிதி பணிகள் குறித்து இயக்குனரிடம் எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை

புதுச்சேரி, : புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, துறை சிறப்புக் கூறு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நலத்துறை இயக்குநர் இளங்கோவனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அதில், புதுச்சேரி அரசு பட்ஜெட்டில் ஒதுக்கும் 16 சதவீத சிறப்புக் கூறு நிதியை, எந்தெந்த திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்படும் சிறப்புக்கூறு நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். பின் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட குப்பம் பேட், கொம்பாக்கம் பேட், ஒதியம்பட்டு, உத்திரவாகினிப் பேட், அம்பேத்கர் நகர், புதுப்பேட், பெரியபேட், கரையாம்பேட், திருவள்ளுவர் நகர், பட்டாணிக்காரன் களம்பேட், ஆத்துவாய்க்கால் பேட், ஜி.என்.பாளையம் பேட் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படவுள்ள பணியினை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கினார். மனுவைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் பணிகளை முழுமையாக செய்வதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று உறுதியளித்தார்.தி.மு.க., ஆதிதிராவிட அணி அமைப்பாளர் செல்வநாதன், அங்காளன், ம.தி.மு.க., தலைவர் கபிரியேல், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் காளி, அன்பழகன், தேவேந்திரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், கதிரவன், ஹரி கிருஷ்ணன், அஞ்சாபுலி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை