உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை

மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை:விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணியில், நில உரிமையாளர்களுக்கு சேர வேண்டிய மீதமுள்ள இழப்பீடு தொகை ரூ. 10.59 கோடி நடப்பாண்டில் வழங்கப்படும். மேம்பாலம், சர்வீஸ் சாலை அமைக்க கையப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு தொகை ரூ. 7.08 கோடி வழங்கப்படும். குப்பம், துத்திப்பட்டு, செல்லிப்பட்டு, திருவண்டார்கோவில் கிராமங்கள் வழியாக அமைய உள்ள மாமல்லபுரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகை நடப்பாண்டில் வழங்கப்படும். இத்துறைக்கு இந்தாண்டு ரூ. 52.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.துறைமுகம்: புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் கப்பல் வந்து செல்ல கூடிய முனையம் அமைப்பதிற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் துார்வாரும் பணி மேற்கொள்ளப்படும். நடப்பு ஆண்டிற்கு ரூ. 16.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை