உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் போலீசார், சண்முகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திராநகரை சேர்ந்த தினகரன், 20; என்பவர் பொது இடத்தில், நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டினார். அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து தினகரனை, கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ