உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசி மக விழா கருத்தரங்கு

மாசி மக விழா கருத்தரங்கு

புதுச்சேரி : கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில் மாசி மக விழா கருத்தரங்கம் நடந்தது.லாஸ்பேட்டையில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி சிறகத்தின் சிறப்பு பணி அலுவலர் வாசுகி வரவேற்றார்.கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், பேசுகையில், மாசி மக தினத்தில், அனைத்து கோவில்களில் இருந்து உற்சவர்கள் ஒன்றாக சங்கமிக்கும் இடமாக புதுச்சேரி கடற்கரை காட்சியளிக்கும். மக நட்சத்திரம், முழு பவுர்ணமி அன்று உற்வச மூர்த்திகள் நீராடும் இடத்தில், புனித நீராடினால், பாவங்கள் நீங்கும் என, தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக, வைத்தியநாதன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், தமிழ் சங்க செயலாளர் ஆதிகேசவனார், மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ