உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் மினி பஸ் இயக்கம்

மீண்டும் மினி பஸ் இயக்கம்

அரியாங்குப்பம்: புதுச்சேரி - ஆண்டியார்பாளையம் பகுதிக்கு செல்லும் மினி பஸ் சேவையை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் இருந்து ஆண்டியார்பாளையம் பகுதிக்கு பி.ஆர்.டி.சி., மினி பஸ் சென்று வந்தது. அதையடுத்து, பஸ் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில்,மீண்டும் அந்த பகுதிக்கு மினி பஸ் சேவையை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில்,பி.ஆர்.டி.சி., பொது மேலாளர் கலியபெருமாள், மேலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பா.ஜ., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ