உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூடுபிடிக்குது ரெஸ்டோ பார்கள் விவகாரம் கவர்னரிடம் அமைச்சர் புகார் 

சூடுபிடிக்குது ரெஸ்டோ பார்கள் விவகாரம் கவர்னரிடம் அமைச்சர் புகார் 

என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன், சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில், வீடுகளுக்கு மத்தியில் ரெஸ்டோ பார்களை தாராளமாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு கிராமங்களும் தப்பவில்லை.கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு மத்தியிலும், கோவில்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகிலும் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டன. நள்ளிரவு வரை இயங்கும் ரெஸ்டோ பார்களால் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளரின் தோல்விக்கு ரெஸ்டோ பார்களும் ஒரு காரணம் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில், அமைச்சர் சாய் சரவணன்குமார் நேற்று காலை கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எனது ஊசுடு தொகுதியில் எனக்கு தெரியாமல், தொண்டமாநத்தம் கிரைஸ்ட் கல்லுாரி எதிரிலும், துத்திப்பட்டு மாதா கோவிலுக்கும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இடையில் திறக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை உடனடியாக அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த ரெஸ்டோ பார்களையும், கூடப்பாக்கம் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள பாரையும் அகற்ற கவர்னரை சந்தித்து முறையிட்டேன். அவற்றை உடனடியாக மாற்றி தருவதாக உறுதி அளித்தார்.அம்மா நகர் குடியிருப்பு குப்பை கிடங்கு மதில் சுவர் உயரத்தை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்தேன். அதையும் செய்து தருவதாக கவர்னர் உறுதி அளித்தார்' என வீடியோ பதில் தெரிவித்துள்ளார்.அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரே தனக்கு தெரியாமலே தனது தொகுதியில் திறக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை மூடுமாறு, கவர்னரிடம் நேரடியாக புகார் அளித்தது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை