உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., சிவா துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., சிவா துவக்கி வைப்பு

புதுச்சேரி: ஆத்துவாய்க்கால்பேட்டில், ரூ. 16 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார். வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட, ஆத்துவாய்க்கால்பேட்டில் விடுபட்டுள்ள பிரதான சாலைக்கு, புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில், புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கலந்து கொண்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணியை துவங்கி வைத்தார். இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், முக்கிய பிரமுகர்கள் காளி, கந்தன், சிலம்பு, ஏகாம்பரம், செல்வகுமார், சத்தியமூர்த்தி, பிரபாகரன், இளங்கோ, கலையரசன், தமிழரசன், அய்யனார், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை