உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகராட்சி ஊழியர்கள் கூட்டம்

நகராட்சி ஊழியர்கள் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஊழியர் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.மத்திய கூட்டமைப்பு பொது செயலாளர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். தலைவர் விநாயகவேல், துணை தலைவர் அய்யப்பன், பொது செயலாளர் பத்ரிஸ் தெலமாஷ், செயலாளர் இருசப்பன், இணை செயலாளர் சூசைநாதன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், துணை பொருளாளர் நளினா, அமைப்பு செயலாளர் பச்சையப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரியை உயர்த்த தடைசெய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் வழங்கியது போல, நகராட்சி மற் றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். 10 ஆண்டு கள் பணி செய்த தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி