| ADDED : ஆக 20, 2024 05:12 AM
புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் தனியார் பள்ளிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சியில் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.புதுச்சேரி அரசின் சார்பில், 78 வது சுதந்திர தின விழா கடற்கரை சாலையில் நடந்தது. இதில் முத்து ரத்தினம் அரங்க மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமையிலும், பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வழிகாட்டுதலின்படி தனியார் பள்ளிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பிரிவில் சிறப்பாக நடனமாடி முதல் பரிசை பெற்றனர். முதல்வர் ரங்கசாமி கேடயம் வழங்கி மாணவர்களை பாராட்டினார்.மேலும், புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் மாணவர்களை பாராட்டினார். கலை நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.