உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் நாளை மறுநாள் நடக்கிறது.புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் பழமைவாய்ந்த, முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மனை போற்றி பாடல்கள் பாடி பாரதியார் வணங்கி உள்ளார். தொள்ளைக்காது சித்தரும் வழிபட்டுள்ளார்.இத்தகைய பெருமையும், பழமையும் வாய்ந்த இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மகா கும்பாபிேஷகத்திற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது.கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இன்று காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, லட்சுமி ேஹாமம், தன பூஜை, கோ பூஜை, நவகிரக ேஹாமமும், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.நாளை காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (23ம் தேதி) காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை 8:15 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் மங்கள மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. முதலில், புதிய ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. பின், கணபதி மற்றும் பரிவார தேவதைகளுக்கும், முத்துமாரியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், இந்து சமய அறநிலையத் துறை செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் ரவிச்சந்தர், அறங்காவலர் குழு தலைவர் கோதண்டபாணி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி