உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முதலியார்பேட்டை சாமிநாதப்பிள்ளை வீதி, முத்துமாரியம்மன் கோவிலின் 33வது செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. பக்தர்கள் செடல் அணிந்து, அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை பா.ஜ., மாநில செயலாளர் வெற்றிச்செல்வம் வழங்கி கவுரப் படுத்தினார்.நிகழ்ச்சியில், மகாலட்சுமி, ஆசிரியை ராஜம், கோவில் நிர்வாகிகள் ராஜி, சங்கரய்யா, ராமதாஸ் ஜெயக்குமார், தேவேந்திரகுமார், அன்பு, அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை