| ADDED : மார் 26, 2024 11:44 PM
புதுச்சேரி : புதுச்சேரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், இன்று கனக செட்டிகுளத்தில் இருந்து தனது பிரசாரத்தை துவக்குகிறார்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயம், தனது வேட்பு மனுவை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.நேற்று கூட்டணிக்கட்சியின் மூத்த தலைவரான, பா.ம.க நிறுவனர் ராமதாசை சந்தித்து, தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்தார்.வழக்கமாக, நமச்சிவாயம் தேர்தலின் போது,சனி மூலையான கனக செட்டி குளத்தில் இருந்தே, பிரசாரத்தை துவக்குவார்.இதைத்தொடர்ந்து,இன்று மாலை அதே இடத்தில் இருந்தே, தனது பிரசாரத்தை துவக்குகிறார்.இதில் தேசிய ஜனநயாக கூட்டணி கட்சித் தலைவரான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொள்கின்றனர்.வேட்பாளரை அறிவிப்பதில் சுணக்கம் காட்டிய, பா.ஜ., தற்போதுதேர்தல் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கதிட்டமிட்டுள்ளது.