உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கூரியர் பார்சல் அலுவலகத்தில் சோதனை

போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கூரியர் பார்சல் அலுவலகத்தில் சோதனை

புதுச்சேரி : புதுச்சேரியில் பார்சல்கள் மூலம் போதை பொருள் வருகிறதா என்பதை கண்டறிய, கூரியர் கம்பெனி குடோன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்தில் இருந்து சென்னை வந்த பார்சலை சோதனை செய்தபோது, ரூ. 2 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருந்தது. பார்சல் முகவரி புதுச்சேரி என குறிப்பிடப்பட்டு இருந்தது.இதனால் கூரியர் பார்சல்கள் மூலம் புதுச்சேரிக்கு போதை மாத்திரைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அடிக்கடி கூரியர் கம்பெனிகளில் சோதனை மேற்கொள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு புதுச்சேரி போலீசுக்கு அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் தலைமையிலான போலீசார், போதை பொருள் கண்டறியும் மோப்ப நாய் பைரவா உதவியுடன் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் கம்பெனி தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனையில் மேற்கொண்டனர்.இந்த சோதனையில் போதை பொருள் ஏதும் சிக்கவில்லை. இதுபோல் கூரியர் கம்பெனி அலுவலக குடோனில் தினசரி போலீசார் சோதனை மேற்கொள்வர் என தெரிவித்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை