உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 4 பேரிடம் நுாதன பண மோசடி

புதுச்சேரியில் 4 பேரிடம் நுாதன பண மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைனில், 4 பேரிடம் 96 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவரது பேஸ் புக்கில் கார் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் வந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, முன்பதிவு கட்டணம் அனுப்ப வேண்டும் என, கூறியுள்ளார். அதை நம்பி, அவர், 77 ரூபாயை அருண்பாண்டியன் அனுப்பினார். பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.அதேபோன்று லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், அவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் விடுவதாக மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.தொடர்ந்து, ஏம்பலம் பகுதியை சேர்ந்த திவாகர், 6 ஆயிரம் ரூபாய், காரைக்காலை சேர்ந்த ஆகாஷ், 3 ஆயிரம் ரூபாயை பல்வேறு வகையில் மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை