உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியா முழுதும் லிப்ட் கேட்டு பயணம் வட இந்திய இளைஞர்கள் புதுச்சேரி வருகை

இந்தியா முழுதும் லிப்ட் கேட்டு பயணம் வட இந்திய இளைஞர்கள் புதுச்சேரி வருகை

இந்தியா முழுதும் லிப்ட் கேட்டப்படி பயணத்தை துவங்கியுள்ள இளைஞர்கள், புதுச்சேரி வந்தனர்.புதுச்சேரி முருகா தியேட்டர் சிக்னலில் மதிய நேரம் சாலையோரம் இரண்டு இளைஞர்கள் அழுக்கான உடைகளுடன் கண்களில், பரிவுடன் லிப்ட் கேட்டப்படி, ஒரு அட்டையை துாக்கி பிடித்து கொண்டு நின்றிருந்தனர். அவ்வழியாக, வந்த வாகன ஓட்டிகள் பரிதாபப்பட்டு, ஊருக்கு செல்ல பணம் இல்லையா. நாங்கள் தருகிறோம். எந்த ஊருக்கு செல்ல வேண்டும். எவ்வளவு வேண்டும் என்று கேட்டப்படி மணி பர்சை திறந்தனர். ஆனால் அந்த பணத்தை ஏற்க மறுந்த இளைஞர்கள், தங்களுடைய பயண கதையை விவரித்தனர்.என்னுடைய பெயர் ராஜட் ஜெய்தி. பஞ்சாப் மாநிலம் லுாதியானாவை சேர்ந்தவன். பி.ஏ., படித்துள்ளேன். என்னுடைய நண்பனின் பெயர் ராகுல் சகானி. அவர் பி.காம்.,படித்துள்ளார். நான் என்ற பெயரில் யூடியூப் சேனலும், அவர் என்ற பெயரில் டியூப் சேனலும் நடத்தி வருகிறார்.இருவருமே போக்குவரத்திற்கு ஒரு பைசா செலவழிக்காமல் பொதுமக்களிடம் லிப்ட் கேட்டப்படி இந்தியா முழுதும் சுற்றி பார்க்க முடிவு செய்தோம். நான் லுாதியானாவில் கடந்தாண்டு மார்ச் 1ம் தேதி பயணத்தை துவங்கினேன். அவர் பீகார் காயா என்ற இடத்தில் இருந்து அன்றே பயணத்தை துவங்கினார். இருவரும் எதிர்பாரதவிதமாக மேகலாயா ஷில்லாங்கில் சந்தித்தபோது இருவரும் ஒரே குறிக்கோளுடன் லிப்ட் கேட்டு பயணிப்பதை கண்டு ஆச்சரியமடைந்தோம்.அங்கிருந்து ஒன்றாகவே லிப்ட் கேட்டு பயணத்தை துவக்கியுள்ளோம். கோவில்கள், மசூதி, சர்ச், சாலையோரம் என, கிடைக்கும் இடங்களில் துாங்கி, எங்களை ஒவ்வொரு நாளும் புதுப்பித்து வருகின்றோம். வழியில் மக்கள் உணவு தருகின்றனர். எங்களுடைய சொந்த செலவிலும் சாப்பிடுகிறோம்.புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு எல்லா இடங்களையும் லிப்டில் சென்றே சுற்றி பார்த்தோம். துாய்மையான நகரம். புதுச்சேரி மிகவும் அழகாக இருக்கிறது. கடற்கரையும் சூப்பர். போக்குவரத்துக்கென இதுவரை நாங்கள் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. எங்களது பயணத்திற்கு பணம் தேவையில்லை. லிப்ட் தான் முக்கியம்.ஆரோவில் வரை லிப்ட் தர முடியுமா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்க, இருவரை கைத்தட்டி பாராட்டி வாகன ஓட்டிகள், போட்டி போட்டு லிப்ட் கொடுத்து, ஆரோவில் கொண்டுபோய் சேர்த்தனர். ஆரோவில் பயணம் முடிந்த பிறகு, அடுத்து இருவரும் சிதம்பரம் வழியாக கேரளா செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்கள் லிப்டில் பயணிக்கும்போது அந்த அனுபவத்தை வீடியோ எடுத்து யூடியூப்பிலும் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ