உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை 

அரசு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை 

புதுச்சேரி: காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காமராஜர் 122வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. ராஜா தியேட்டர் அருகே உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், நேரு, லட்சுமிகாந்தன், பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மக்கள் சேவை இயக்கம்

காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்திற்கு, இயக்கத்தின் தலைவர் நேரு எம்.எல்.ஏ., மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய நீதிக் கட்சி

புதிய நீதி கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொன் நடராஜன், தேவநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை