உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்

ஏ.கே.டி., கல்லுாரியில் ஒருநாள் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வேதியியல் பேராசிரியர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார்.சென்னை திறன் மேம்பாட்டு பயிற்றுனர் சுரேஷ், 'தன்னம்பிக்கை மற்றும் நேரம் தவறாமை' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வாழ்த்திப் பேசினார்.துணை முதல்வர் மணிகண்ணன் மற்றும் துறை தலைவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.துறை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை