உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டல் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஓட்டல் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.கடலுார் அடுத்த நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் ஓட்டலில் கடந்த 1ம் தேதி காஸ் சிலிண்டர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஓட்டல் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், கராமணிக்குப்பம் வீரப்பன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.இதில் வீரப்பன், சதீஷ்குமார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த வீரப்பன்,38; கடந்த 5ம் தேதி இறந்தார். அவரை தொடர்ந்து சதீஷ்குமார்,30; நேற்று இறந்தார். இதனால், ஓட்டல் தீ விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி