உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுட்டேரி பாரத் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஊசுட்டேரி பாரத் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: ஸ்ரீபாரத் விதியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.வில்லியனுார் அருகே ஊசுட்டேரியில் உள்ள ஸ்ரீபாரத் விதியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்ந்து நான்காவது முறையாக ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்விலும், இரண்டாம் ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்திஜெயசுந்தர் ஆகியோர் கவுரவபடுத்தி பாராட்டி வாழ்த்தினர். மேலும் தொடர் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களையும் கவுரவபடுத்தி பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை