உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெயிலில் இருந்து மக்களை காக்க எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

வெயிலில் இருந்து மக்களை காக்க எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

புதுச்சேரி : வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என, எதிர்கட்சித்தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: புதுச்சேரியில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். காலை 8:00 மணிக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து டாக்டரை சந்தித்து மாத்திரைகள் வாங்க மதியம், 1:00 மணி வரை ஆகிறது.தற்போது வெயிலின் தாக்கத்தால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. சுகாதாரத்துறை அந்தந்த பகுதியில் உள்ள தாய் சேய் துணை நிலையத்தில் மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும்.குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதையும், தாய்மார்களை பரிசோதிப்பதையும் காலை 8:00 மணிக்கு துவங்கி 11:00 மணிக்குள் முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.சுகாதாரத்துறை மூலம், ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளை, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வெயிலில் இருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை