உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலுார் சாலையில் கட்டண பார்க்கிங் அமலுக்கு வந்தது

கடலுார் சாலையில் கட்டண பார்க்கிங் அமலுக்கு வந்தது

புதுச்சேரி, : புது பஸ்டாண்ட் ஏ.எப்.டி.,திடலுக்கு மாறியதை தொடர்ந்து, கடலுார் சாலையில் கட்டண பார்க்கிங் அமலுக்கு வந்துள்ளது.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையடுத்து, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ்டாண்ட் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.அனைத்து பஸ்களும் ஏ.எப்.டி., திடலில் இருந்து இயங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடலுார் சாலையில் கட்டண பார்க்கிங் அமலுக்கு வந்துள்ளது.அந்தோணியார் கோவிலில் இருந்து ரயில்வே கேட் வரை ஒருபக்கமாக இருசக்கர வாகனங்களுக்கு புதுச்சேரி நகராட்சி பார்க்கிங் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதையடுத்து, புதுச்சேரி நகராட்சி கடலுார் சாலையில் கட்டண பார்க்கிங்கிற்கு டெண்டர் விட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதோடு 10 பணியாளர்கள் கடலுார் சாலையில் இருசக்கர வாகனங்களை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை