உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்சி அலுவலகங்கள்வெறிச்

கட்சி அலுவலகங்கள்வெறிச்

தேர்தல் முடிந்ததால் அரசியல் கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தது.புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு கடந்த மே 16ம் தேதி வெளியானது. அதன்பின்பு புதுச்சேரியில் தேர்தல் சூடுபிடிக்க துவங்கி விட்டது. வேட்பாளர் அறிவிப்பு, ஆலோசனை, ஓட்டு சேகரிப்பு, பிரசாரம் என கடந்த ஒரு மாதம் அரசியல் கட்சிகள் படுபிசியாக இருந்தது.இதனால், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் பிசியாக இருந்தது.வேட்பாளர் பிரசார பயண திட்டம், தேர்தல் துறையில் அனுமதி பெறுதல், தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து பிரசார திட்டம் வகுத்து கொடுத்தல், பூத் லிஸ்ட் வழங்கல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், காங்., - தி.மு.க., என்.ஆர். காங்., - பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் வெறிச்சோடியது.கட்சியினர் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை