| ADDED : ஆக 13, 2024 04:59 AM
புதுச்சேரி: பி.சி.எஸ்., அதிகாரிகள் பதவி உயர்வு விவகாரத்தில் நடுவில் குழப்பிவிட்டனர். ஒரு தலைமைச்செயலர் செய்த தவறை தொடர்ந்து செய்கிறார்கள் என முதல்வர் ரங்கசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:நாஜிம்(தி.மு.க.,):பி.சி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கையை 93 ஆக உயர்த்த மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த பதவிகளுக்கு மத்திய தேர்வாணையம் அறிவிப்பு வெளிட்டதா...இவர்களுக்கு அடாக் அடிப்படையில் பதவி உயர்வு தராமல், சி.டி.சி., அடிப்படையில் ஏன்பதவி உயர்வு அளிக்கப்பட்டது.முதல்வர்- ரங்கசாமி:எம்.எல்.ஏ., சொல்வது உண்மை. சி.டி.சி., பதவி உயர்வு முறை நிறுத்தப்படவேண்டும். அவர்களை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. பி.சி.எஸ்., அதிகாரிகள் ஏதாவது கொடுங்க என்று கேட்டு வாங்கி கொண்டனர்.நாஜிம்-(தி.மு.க.,):அந்த பதவியில் உட்கார வேண்டும் என்ற சமூக அந்தஸ்து தான் காரணம். சி.டி.சி., பதவி உயர்வு அப்போது இருந்த தலைமை செயலர் அஸ்வின்குமார் செய்த தவறு. தற்போதுள்ள தலைமை செயலர் நேர்மறையான அணுகுமுறை உள்ளது. மீண்டும் பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு அடாக் அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.முதல்வர் - ரங்கசாமி:நம்முடைய தவறும் இதில் உள்ளது. அவர்களுக்கு ரெகுலராக புரோமோஷன் கிடைக்கவில்லை.நாஜிம்-(தி.மு.க.,): இதற்கு தனியாக டில்லிக்கு கோப்பு அனுப்புங்கள்.முதல்வர்- ரங்கசாமி:அதற்கு முயற்சி எடுக்கிறோம். அதிகாரிகள் பதவி உயர்வு விவகாரத்தில் நடுவில் குழப்பிவிட்டனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.