உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்

இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்

நெட்டப்பாக்கம், : இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அபாரதம் விதிக்கப்படும் என நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, மற்றும் பன்றி இறைச்சி வியாபரம் செய்யும் விற்பனையாளர்கள் மேற்கண்ட இறைச்சி கழிவுகளை காலி மனைகள், நீர்நிலைகள் மற்றும் வீதி ஓரங்களில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கழிவுகளை துாய்மை பணியார்களிடம் வகைப்படுத்தி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் தங்களிடம் அபாரத்தொகை வசூலிப்பதோடு தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை