உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலையத்தில் வியாபாரிகளுக்கு அனுமதி கோரி ஆணையரிடம் மனு

பஸ் நிலையத்தில் வியாபாரிகளுக்கு அனுமதி கோரி ஆணையரிடம் மனு

புதுச்சேரி : தற்காலிக பஸ் நிலையத்தில் வியாபாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் தற்காலிகமாக ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் வியாபாரம் செய்தவர்கள், தற்போது வியாபாரம் செய்ய முடியததால், கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தற்போது இயங்கும் பஸ் நிலையத்தில் இடம் கொடுக்க வேண்டும். பஸ் நிலையத்தில் மேடு பள்ளமாக இருப்பதால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க மணல் கொட்ட வேண்டும்.பஸ் நிலையத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். ஆட்டோ, டெம்போ ஆகிய வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும். புதிய பஸ் நிலையத்தில் சீரமைக்கும் வேலை முடிந்து அங்கு பஸ் நிலையம் மாற்றினாலும், ஏ.எப்.டி., மைதானத்தில், நிரந்தரமாக கழிவரை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகை வலியுறுத்தி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் மனு கொடுத்தார்.அப்போது, தொகுதி செயலாளர் சக்திவேல், காங்., செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், துணை செயலாளர் ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை