| ADDED : ஜூலை 18, 2024 04:22 AM
புதுச்சேரி : தமிழக அரசிடம் தண்ணீர் பெற்று தர அசோக்பாபு எம்.எல்.ஏ., முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.மனுவில்;கடந்த 15.06.1910 ஆண்டில் பிரஞ்சு அரசும் ,தமிழகத்தை ஆட்சி செய்த ஆங்கிலோ அரசும், பெண்ணை ஆற்றில் சாத்தனுார் அணை வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டிற்கு பங்காரு வாய்க்காளில் தண்ணீர் அளிக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை புதுச்சேரி அரசும், தமிழக அரசும் இணைந்து கடந்த 15.10.2007 ஆண்டு கடைசியாக புதுப்பித்தது.ஆனால், தமிழக அரசு ஒப்பந்தப்படி இன்று வரை புதுச்சேரிக்கு தண்ணீர் தரவில்லை.கடந்த 12ம் தேதி டில்லியில் உள்ள தேசிய நீர் ஆணையத்தில் பெண்ணை ஆற்று ஒப்பந்தப்படி, புதுச்சேரிக்கு தமிழக அரசு தண்ணீர் அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரிக்கு தண்ணீர் அளிக்க தமிழக அரசிடம் பேசி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.புதுச்சேரி விவசாயத்திற்கு 270 எம்.எல்.டி., குடிநீருக்கு 330 எம்.எல்.டி., வீதம் மொத்தம் 600 எம்.எல்.டி., தேவைப்படுகிறது.இதனை பெண்ணை ஆற்று ஒப்பந்தப்படி, தினமும் அளிக்க, தமிழக அரசை அனுகி பெற்று தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.மனு அளிப்பின்போது, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ராமு, பொதுச்செயலாளர்கள் சக்திபாலன்,சீனிவாசன், துணை தலைவர்கள் பெருமாள், மாநில செயலாளர் பலராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.