உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி ஆணையரிடம் மனு

பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி ஆணையரிடம் மனு

புதுச்சேரி : பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க வேண்டி நகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு: புதுச்சேரியில் உள்ள ஓட்டல்கள், வணிக வியாபார இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பெரிய மற்றும் சிறிய ஓட்டல்களில், பிளாஸ்டிக் கட் ஷீட்களை பயன்படுத்துவதால், வயிறு தொடர்பான உடல் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால், கேன்சர் போன்ற பெரிய வியாதிகள் ஏற்படும். எனவே புதுச்சேரி நகரப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகரமாக உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையரிடம் வக்கீல் புவனேஸ்வரி தலைமையில் மனு அளித்தனர். அப்போது, வக்கீல் ஐயப்பன், இணை ஒருங்கிணைப்பாளர் பிரதாபன், பன்னீர்செல்வன், நாகராஜ், அன்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி