மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று 6ம் தேதி காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடந்து முடிந்தது. புதுச்சேரியில் 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11,856 மாணவர்களும், காரைக்கால் மாவட்டத்தில் 11 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,152 பேர் என, மொத்தம், 14,008 பேர் தேர்வு எழுதினர்.இது தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்., 2ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இன்று 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தவிர, மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago